Sunday 5 May 2013

சகல பாவங்களையும் தீர்க்கும் சந்திர கிரகண வழிபாடு-பலன்கள்


ஒவ்வொரு ஆண்டும் சூரியன் மற்றும் சந்திர கிரகணங்கள் தோன்றுவதை எல்லோரும் ஒரு வித பதட்டத்துடனே எதிர்கொள்கின்றனர். தங்கள் ராசிக்கு என்ன பலன் வரப் போகிறது என்று அச்சம் கொள்கின்றனர். சுழலும் இந்த பூமியில், கிரகங்களின் மாற்றம் மனித வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது. 

அதைப் போல கிரகணம் என்பது, சூரியன், சந்திரன், பூமி, இவர்களது சுழல் வட்ட பாதையைக் குறித்து பூமியில் வாழும் மனிதர்களுக்கு சுப பலன்களை அவர்களது வழிபாடுகளுக்கு ஏற்ப கொடுக்கிறது. கிரகணம் என்றால், விழுங்குதல், சாப்பிடுதல், சேர்தல், இணைத்து வைத்தல் ஆகிய பொருள்படுகிறது. 

அறிவியலார் களின் கருத்தின் படி, சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதையே ஆன்மீக உலகம் நிழல் கிரகமாண கேது, சந்திரனை ஆட்கொள்ளுதலால் (விழுங்குதல்) கிரகணம் ஏற்படுகிறது என்று சொல்கிறது. 

2000 ஆண்டுகளுக்கு முன்பாக மகாகவி காளிதாசரால் இயற்றப்பட்ட உத்திர காலாமிர்தம் என்ற நூலில் 75-வது ஸ்லோகம் சூரியக் கிரகணத்தை முன்பாக வைத்து காளிதாசர் கிரகணம் என்ற நிகழ்வு இந்த உலகத்திற்கு "வரவேற்க வேண்டும்'' என்று தான் சொல்லியிருக்கிறார். 

அந்த காலகட்டத்தில் நந்தவனம், கோவில், நதிக்கரை, கடற்கரை, பொதில், மாட்டுத் தொழுவம் ஆகிய இடங்களில் இறை வழிபாடு, முன்னோர் வழிபாடு ஆகியவற்றை நடத்தலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இவர் கருத்தின்படி கிரகணத்தை நல்ல நிகழ்வு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். 

கிரகணம் நிகழும் நேரம்.............. இன்று இரவில் நடைபெறக்கூடிய கிரகணம் "பார்சுவ சந்திர கிரகணம்'' என்றும் பெயர். கிரகண ஆரம்ப நேரத்தை தொடுதல் நேரம் என்று சொல்லலாம். இந்திய நேரப்படி இரவு 1.24 மணிக்கு தொடங்குகிறது. மத்திம கால கட்டம் இரவு 1.38 மணி மோட்சம் (விடுதல் நேரம்) இரவு 1.51 மணி. 

இந்த கிரகணம் பூமியில் சந்திரனின் சதன் பாகத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. அந்த நேரத்தில் சந்திரன் சென்னிறமாகத் தெரியும். தென் மேற்கு திசையில் பிடித்து, தென் கிழக்கு திசையில் விடுகிறது. பொது மக்கள் மாலை 4 மணிக்கு முன் உணவை உண்டு முடித்துக் கொள்வது நல்லது. 

இந்த கிரகணத்தின்படி ஆட்சியாளர்களுக்கு இடையே பகிரங்க போட்டி ஏற்படும். விலைவாசி குறையலாம். மக்களுக்கு இயற்கை சம்பந்தமான பயம் ஏற்பட்டு விலகும். விஷ ஜந்துக்களுக்கும், யானைகளுக்கும், நோய் ஏற்படும். மேற்கத்திய நாடுகளில் வசிப்பவர்கள், ஹிந்து தேசத்தவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் ஏற்படும். 

தை மாதம் தொடங்க 6 மாதங்களுக்கு முன் அந்நிய தேசத்தவர்கள் சாதுக்கள், வேதங்களை படிப்பவர்கள், குறிப்பாக பசுக்கள், பிற கால் நடைகளுக்கு பீடை உண்டாகலாம். மக்கள், விலை ஏற்றத்தால் திடீரென ஏற்படும் பசி, வறுமையால் வருத்தப்படுவார்கள். இந்த கிரகணத்தால் சிற்பிகள், கலை உலகத்தார், திரைப்படத் துறையினருக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாகக் கூடிய சூழ்நிலை ஏற்படும். 

கேது கிரஷ்ட சந்திர கிரகணம்........... ஒரு கிரகணம் நிகழும் போது அது ராகுவால் ஏற்படுகிறதாப கேதுவால் ஏற்படுகிறதாப என்று பிரித்துக் காட்டியுள்ளனர். இன்று நிகழக்கூடிய `சந்திர கிரகணத்திற்கு கேது கிரஷ்ட சந்திர கிரகணம் என்று பெயர். இந்த கிரகணம் இந்தியாவில் முழுமையாக தெரியும். 

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரகாரர்கள்........... விசாகம், சித்திரை, திருவாதிரை, சகயம் ஆகியோர்கள் சுவாதி நட்சத்திரத்தார்கள் சாந்தி பரிகாரம் செய்வது நல்லது. இன்று திதி செய்வோர் முறைப்படி செய்யலாம்.

No comments:

Post a Comment