Sunday 5 May 2013

ஏற்றம் தரும் ராம நவமி விரதம்


தனி மனித ஒழுக்கத்தை தன்னிகரில்லாமல் வாழ்ந்து காட்டிய காவியத் தலைவன் ராமபிரான். இந்த தனி மனித ஒழுக்கத்தின் காரணமாகவே அவர் பெருமை பாடும் ராமாயண இதிகாசம் விண்ணை முட்டும் சிறப்பு இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் மிக்க காப்பியமாக உயர்ந்து நிற்கிறது. 

மகாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரமும் ஒரு பெயர். சிறப்பை எடுத்துரைக்கும். அந்த வகையில் ராமாயணம் தனி மனித ஒழுக்கத்தையும், அதர்மத்தை வென்று தர்மத்தை நிலை நாட்டுவதையும் உலகுக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. 

இலங்கை வேந்தனான ராவணன், தேவர்கள், முனிவர்கள் மட்டுமின்றி பிற மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். மேலும் பிறர் மனை மீது நாட்டம் கொண்டவனாகவும் இருந்தான். அவனது அதர்மப் போக்கையும், ஒழுக்கமற்ற வாழ்வையும் அழிக்கும் பொருட்டுதான் மகாவிஷ்ணு, பூமியில் அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மகனாக ராமர் என்ற பெயரில் பிறப்பெடுத்தார். 

அவ்வாறு ராமர் பிறப்பெடுத்த தினம் ராம நவமியாக கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் சுக்ல பட்ச (வளர்பிறை) நவமி திதியில் நண்பகல் நேரத்தில் ராமர் பிறந்தார். பொதுவாக மக்கள் அனைவரும் அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள். 

இதனால்கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகா விஷ்ணுவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறையை கூறி மன்றாடினர். அப்போது விஷ்ணு பகவான், 'உங்களையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும்' என்று உறுதியளித்தார்.   அதன்படியே வாசுதேவர்- தேவகி ஆகியோருக்கு மகனாக, அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். 

அன்றைய தினம் கிருஷ்ணஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. நவமி திதியில் தசரதர்- கவுசலை தம்பதியருக்கு மகனாக பிறந்தார் ராமபிரான். அன்றைய தினம் ராம நவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது.   ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். 

இதற்கு 'கர்ப்போஸ்தவம்' என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை. இதற்கு 'ஜன்மோதீஸவம்' என்று பெயர். இவ்வாறு ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.   

விரத முறை........ விரதத்தை தொடங்குவதற்கு முதல் நாள், வீட்டை சுத்தம் செய்து வைக்க வேண்டும். விரதம் தொடங்கும் நாளன்று ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். 

பின்னர் வரும் ஒவ்வொரு நாளும் சர்க்கரை பொங்கல், பாயசம் உள்ளிட்ட நைவேத் தி யங்களை படைத்து வழிபடுவதுடன், ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்த வேண்டும். 

இதனை ஒன்பது நாளும் சாத்த முடியாதவர்கள், ராம நவமி தினத்திலாவது செய்ய வேண்டும். ராம நவமி விரத நாட்களில் மட்டும் அல்லாத எல்லா காலங்களிலும், ராமஜாதகத்தை படமாக காகிதத்தில் வரைந்து வைத்தோ, அல்லது செப்பு தகட்டில் வரைந்து வைத்தோ வழிபடுவது சிறப்பான பலனை தரக்கூடியது. 

ராமருடைய ஜாதகத்தின்படி சூரியன்- மேஷ ராசியிலும், செவ்வாய்- மகர ராசியிலும், குரு- கடக ராசியிலும், சுக்ரன்- மீன ராசியிலும், சனி- துலாம் ராசியிலும் உச்சஸ்தானத்தில் இருக்கின்ற ஜாதகம் என்பதால் அவரின் ஜாதகம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. 

இந்த ஜாதகத்தை வைத்து வழிபடுவதால், நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். 

No comments:

Post a Comment