Sunday 5 May 2013

முருகனுக்கு வெள்ளிக்கிழமை விரதம்


ஐப்பசி, வளர்பிறை, முதல் வெள்ளிக்கிழமையன்று தொடங்கி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் விரதம் காக்க வேண்டும். இதனை `வார விரதம்' என்றும் குறிப்பிடுவர். 

ஒரு தூய்மையான இடத்தில் வாழை இலைமேல் நெல்லைப் பரப்பி, கலசத்தில் நீர் வைத்து, மாவிலைகள், தருப்பைகளை வட்டமாக அடுக்கி, மாலைகளாலும், மலர்களாலும் அழுகுபடுத்தி ஓர் ஆடையை அணிவிக்க வேண்டும். 

அப்புனித கலசத்தில் முருகனை எழுந்தருளச் செய்து அல்லது கலசமே இல்லாமல் முருகன் திருமேனியை எழுந்தருளச் செய்து வழிபட வேண்டும். அன்று மாலையில் முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்ட பின் பிரசாதங்களை உண்ணலாம். 

இதே விரதத்தைச் சித்திரை மாத வளர்பிளை வெள்ளிக் கிழமை முதல் தொடங்கித் தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். செவ்வாய்க்கிழமை முருகனுக்குக்குரிய நாளாகும். 

முருக பக்தர்கள் சிலர் வெள்ளிக்கிழமைகளுக்குப் பதிலாகச் செவ்வாய்க் கிழமைகளில் விரதம் காப்பார்கள். இவ்விரதத்தை முறையாக செய்து வந்தால் நினைத்தது நிறைவேறும்.

No comments:

Post a Comment