Saturday 4 May 2013

அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருக்கோயில்


   
திருவிழா:
   
  சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை, பவுர்ணமி, நவராத்திரி, வசந்த நவராத்திரி, ஆடி 18 காவேரி பூஜை  
   
தல சிறப்பு:
   
  ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு கீழே மகாமேரு வைத்து அதற்கு பூஜை செய்வது சிறப்பு. அம்மனின் முன் சிம்மத்திற்கு பதில் நந்தி இருப்பது சிறப்பு.  
   
திறக்கும் நேரம்:
   
  காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில் போக்குவரத்து நகர், பிடிசி போஸ்ட், சின்ன உடைப்பு, மதுரை-625 022  
   
போன்:
   
  +91 93452 92986, 9487599292, 9597053429  
   
பொது தகவல்:
   
  இங்கு சுந்தர மகாலிங்கம், பாண்டிய விநாயகர், வழிவிடும் முருகன், வெங்கடாஜலபதி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், கருப்பண்ணசுவாமி, கன்னி விநாயகர், மகாலட்சுமி, சிவதுர்கை, சரஸ்வதி, பரிகார விநாயகர், தட்சிணாமூர்த்தி, வாராஹி, நவக்கிரக சன்னதிகள் அமைந்துள்ளன.  
   

பிரார்த்தனை
   
 
திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க, நினைத்த காரியம் நிறைவேற இங்குள்ள ராஜராஜேஸ்வரி அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற ..


ஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரீ
ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேச்வரீ 
ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணீ
நாக கங்கண நடராஜ மனோஹரீ
ஞான வித்யேச்வரீ ராஜராஜேச்வரீ


என்ற ஸ்லோகத்தை பாராயணம் செய்து பலனைடைகின்றனர். இங்குள்ள பரிகார விநாயகருக்கு 21 நாள் அதிகாலையில் ஜல அபிஷேகம் செய்து வழிபட்டால் சகல காரியங்களும் சித்திக்கும்.



   
நேர்த்திக்கடன்:
   
  பக்தர்கள் அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தும், பூப்பாவாடை சாற்றியும், சக்கரை பொங்கல் படைத்தும், ஊஞ்சல் சேவை செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.  
   
தலபெருமை:
   
 
இங்குள்ள அம்மன் சுமார் மூன்றரை அடி உயரத்தில் வலதுகால் தொங்கவிட்டு இடதுகால் மடக்கியும், வலது கையில் நீலோத்பவ மலரும், இடது கையில் கரும்பும், பின்னங்கைகளில் பாசம், அங்குசம் வைத்து அருள்பாலிக்கிறாள்.


இவளையும் இவளுக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள மகாமேருவையும் சேர்த்து பூஜை செய்தால், முப்பத்து முக்கோடி தேவர்களையும் பூஜித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.


இத்திருக்கோயிலில் சபரிமலை ஐயப்பன் சன்னதியில் உள்ளது போன்று கன்னிமூலையில் பரிகார விநாயகர் எழுந்தருளி சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்து அருள்பாலிக்கிறார்.  நவகிரகங்களுக்கு தனி சன்னதி உள்ளது.




   
  தல வரலாறு:
   
  பக்தர்கள் தங்களது ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு கோயிலாக சென்று வழிபட வேண்டியுள்ளது. இந்தக்குறையை போக்கவே இத்தலத்தில் மகாமேருவுடன் கூடிய ராஜராஜேஸ்வரியை தனி சன்னதியிலும், ஒரு மனிதனுக்கு தேவையான கல்வி, செல்வம், வீரம் மூன்றும் வழங்கக்கூடிய துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி மூவரும் ஒரே சன்னதியிலும் அருள்பாலிக்கின்றனர். தமிழகத்தின் தென்பகுதியில் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு கோயில்கள் மிகவும் குறைவு. மதுரை மாவட்டத்திலேயே ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்குரிய தனி கோயில் இது தான்.  
   
சிறப்பம்சம்:
   
  அதிசயத்தின் அடிப்படையில்: ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு கீழே மகாமேரு வைத்து அதற்கு பூஜை செய்வது சிறப்பு. அம்மனின் முன் சிம்மத்திற்கு பதில் நந்தி இருப்பது சிறப்பு. 

No comments:

Post a Comment